பீகார் சட்டசபைத் தேர்தல்-விறுவிறுப்பான 3வது கட்ட வாக்குப் பதிவு
பாட்னா: பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் இன்று காலை 3வது கட்ட வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 48 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.
ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்ட நிலையில் இன்று 3வது கட்ட வாக்குப் பதிவு காலையில் தொடங்கியது. இந்த தேர்தலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மொத்தம் 1.03 கோடி வாக்காளர்கள் இதில் பங்கேற்கின்றனர். இவர்களில் 47.56 லட்சம் பேர் பெண்கள் ஆவர். மொத்தம் 65 பெண்கள் உள்பட 785 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்றைய தேர்தலில் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி போட்டியிடும் இரு தொகுதிளிலும் (ரகோபூர், சோனேபூர்) வாக்குப் பதிவு நடைபெறுவதால் தேர்தல் விறுவிறுப்பாகியுள்ளது.
இன்றைய தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் 35 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சியான பாஸ்வானின் எல்ஜேபி 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
ஐக்கிய ஜனதாதளம் மற்றும் கூட்டணிக் கட்சியான பாஜக தலா 24 தொகுதிகளில் களத்தில் நிற்கின்றன.
காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருவதாக டிஜிபி நீல்மணி தெரிவித்துள்ளார்.
மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications