வாக்குகளை வாங்கிக் கொண்டு இஸ்லாமியர்களை திமுக ஏமாற்றிவிட்டது: நாகூர் மீரான் குற்றச்சாட்டு
காயல்பட்டினம்: இஸ்லாமிய சமுதாயத்திற்கு அதிக நன்மை செய்தது அதிமுக தான் என்று முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினம் நகரம் சார்பில் அதிமுகவின் 39-வது ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் கலந்து கொண்டு பேசியதாவது,
இஸ்லாமிய சமுதாயத்திற்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால் இஸ்லாமியர்களின் 90 சதவிகித வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டனர்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்திற்கு மணி மண்டபம் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. வக்பு வாரியத்திற்கு சென்னையில் தலைமை அலுவலகம் கட்ட ரூ. 1.50 கோடி அதிமுக அரசு தான் ஒதுக்கியது. இப்படி பல்வேறு நன்மைகளை இஸ்லாமிய சமுதாயத்திற்காக அதிமுக செய்துள்ளது.
திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கியதாகக் கூறுகிறார். இதன் மூலம் இஸ்லாமியர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 10 பேர் மருத்துவக் கல்லூரியில் படித்தால் தற்போது வெறும் 3 பேர் மட்டும் தான் படிக்கிறார்கள். எனவே இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் ஏரல் ரமேஷ், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications