முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை-பசும்பொன் கிராமத்தில் பலத்த பாதுகாப்பு

ராமநாதபுரம் கமுதி தாலுகாவில் உள்ள பசும்பொன்னில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை வருகிற 30 ந் தேதி வழக்கம் போல சிறப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ளது.
இதில் திமுக மற்றும் தமிழக அரசின் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, காங்கிரஸ் சார்பில் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் திரளாக வருகின்றனர்.
இதையடுத்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று காவல்துறை டிஜிபி லத்திகா சரண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் மூன்று மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் லத்திகா சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில், குருபூஜை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்து கமுதிக்கு செல்கிறோம்.
பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது இறுதி செய்யப்படவில்லை. பூஜைக்கு வருபவர்கள் வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்து செல்லாமல் தடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பசும்பொன்னுக்கு வரும் அரசியல் தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.
தேவர் குருபூஜைக்கு வருவோருக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications