குளிர் சாதனப் பெட்டி விழுந்ததில் 10 மாத பெண் குழந்தை பலி
சென்னை: குளிர் சாதனப் பெட்டி விழுந்ததில் 10 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.
திருவல்லிக்கேணி பக்கீர் சாகிப் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (27). ஏ.சி. மெக்கானிக்கான இவர் வீட்டில் வைத்து ஏ.சி. மிஷின்கள் மற்றும் குளிர் சாதனப் பெட்டிகளை பழுது பார்த்து வருகிறார்.
ராஜேஷின் மனைவி காஞ்சனா (24). இவர்களின் ஒரே குழந்தை சாதனா. 10 மாத குழந்தையான சாதனா நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கிருந்த குளிர் சாதனப் பெட்டிக்கு அருகில் சென்றாள். நேற்று சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பலமாக வீசிய காற்றில் குளிர் சாதனப் பெட்டி சாதனாவின் தலையில் விழுந்தது. இதில் குழந்தை நசுங்கியது.
காயமடைந்த சாதனாவை ராஜேஷ் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. பெற்ற குழந்தையைப் பரிகொடுத்த பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை எல்லாம் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் குறித்து ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications