கர்நாடகத்தின் அடாவடித்தனத்தால் இந்திய ஒருமைப்பாடு சிதறும் அபாயம்-நெடுமாறன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் காவிரி சமவெளிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் ஏற்க மறுத்துள்ளது.
ஆளும் கட்சியான பாஜக, எதிர்க் கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட மறுத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
காவிரியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் இரு மாநிலங்களும் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்து நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பிலும், இறுதித் தீர்ப்பிலும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தன்னுடைய தேவைக்குப்போக எஞ்சிய நீரைத்தான் தமிழகத்துக்கு வழங்க முடியும் என்று கர்நாடகம் கூறியுள்ளது. இதனால், தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். அரிசி உற்பத்தியும் பெருமளவு பாதிக்கப்படும். தமிழக முதல்வர் உடனடியாக பிரதமரை சந்தித்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி, தமிழகத்துக்கு எதிரான நிலை எடுத்திருப்பதை முதல்வர் கருணாநிதி கண்டிக்கத் தயங்குவது ஏன்? கர்நாடக அடாவடித்தனத்தின் விளைவாக இந்திய ஒருமைப்பாடு உடைந்து சிதறும் அபாயம் உருவாகும் என்று அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications