தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது-வானிலை மையம்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி, தெற்கு உட்புற கர்நாடகா, கேரளா, ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் 29ம் தேதியன்று வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அனேக பகுதிகளில் மழை பெய்யும்.
ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தென் மேற்குப் பருவமழை தெலுங்கானா, கடலோர ஆந்திராவின் பல பகுதிகள், வடக்கு உட்புற கர்நாடகா, ராயலசீமாவின் பெரும்பாலான பகுதிகளில் முடிவுக்கு வந்ததாகவும் அது அறிவித்துள்ளது.
தமிழகம் முழுக்க விடிய விடிய மழை
இதற்கிடையே நேற்று இரவு முழுவதும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. சென்னை நகரில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தபடி உள்ளது. லேசானது முதல் பல மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று பெய்த மழைக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications