வந்தது '3 ஜி' வசதி: இனி எவரெஸ்டிலிருந்தும் செல் பேசலாம்!
Subscribe to Oneindia Tamil

என்செல் எனும் செல்போன் நிறுவனம், இமயமலையின் 5200 மீட்டர் (17000 அடி உயரம்) உயரத்தில், கோரக் ஷெப் கிராமத்தின் அருகே 3 ஜி டவரை அமைத்துள்ளது.
இதன் மூலம் எவரெஸ்ட் மற்றும் அதன் அருகில் உள்ள கும்பு பள்ளத்தாக்குக்கு வரும் பயணிகள், மலை ஏறுவோருக்கு வெளியுலகத் தொடர்பு எளிதாகியுள்ளது.
எவரெஸ்ட் பகுதியில் மட்டும் 8 தொலைத் தொடர்பு நிலையங்களை அமைத்துள்ளது இந்த நேபாள நிறுவனம்.
இதற்கு முன்புவரை பயணிகள் மிகக் காஸ்ட்லியான சேட்டிலைட் போன்களை பயன்படுத்தி வந்தனர்.
இனி அவற்றுக்கு அவசியம் இல்லை. எவரெஸ்டிலிருந்தே குறைந்த செலவில் செல்போனில் பேசிக் கொள்ள முடியும்.
எவரெஸ்ட் சிகரம் நேபாள எல்லைக்குள் வருவது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications