அரோமா மொபைல்ஸின் புதிய டச் ஸ்கிரீன் போன் அரோமா ஏடி335

செல்போன்கள் மற்றும் உதிரி பாக விற்பனையில் புதிதாக நுழைந்துள்ள நிறுவனம் அரோமா மொபைல்ஸ். இது முதல் டச் ஸ்கிரீன்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் அரோமா ஏடி 335.
இரட்டை சிம்களைப் பொருத்தக் கூடிய இந்த போனில், 2.0 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீ்ன் உள்ளது. ப்ளூடூத், டிஜிட்டல் கேமரா, வீடியோ பிளேயர், ரெக்கார்டர் போன்ற வசதிகள் உள்ளன.
1000 போன் எண்கள் வரை சேமிக்கலாம். மெமரி 4 ஜிபி வரை வைத்துக் கொள்ள முடியும்.
ஜிபிஆர்எஸ், வாப், எம்எம்எஸ் ஆகிய வசதிகளையும் இதில் பெற முடியும். மொபைல் டிராக்கர், டார்ச், வாய்ஸ் சேஞ்சர்/பின்னணி இசை, ஆட்டோ கால் என சகல வசதிகளும் நிறைந்த போனாக இது உள்ளது.
இந்த மொபைல் போனின் விலை ரூ. 2299 ஆகும்.
போனை வெளியிட்டுப் பேசிய நிறுவனத்தின் இயக்குநர் பவன் சத்தா பேசுகையில், வாடிக்கையாளர்களுக்கு புதியவற்றைத் தரும் நோக்கிலேயே இந்த புதிய வகை செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளோம். அந்த வகையில் டச்ஸ்கிரீன் வசதி கொண்ட போனாக அரோமா ஏடி335 விளங்குகிறது.
விலையும் அதிகம் இல்லை. இதனால் சகல தரப்பினரும் இதை வாங்க முடியும் என்றார்.
ரூ. 3500க்கு லெமன் மொபைல்ஸின் 3ஜி போன்
இதேபோல லெமன் மொபைல்ஸ் நிறுவனம் ரூ. 3,500க்கு 3ஜி ஹேன்ட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் மாதத்திலிருந்து இது விற்பனைக்கு வருகிறது.
இதுகுறித்து பாஸ்ட்டிராக் கம்யூனிகேஷனின் இயக்குநர் கோபால் கர்லா கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு அதிக அம்சங்களைக் கொண்ட செல்போன் சாதனங்களை வழங்குவதே எங்களது நோக்கமாகும். அதிலும் 3 ஜி ஹேன்ட்செட் விற்பனை வரும் நாட்களில் பெரிய அளவில் அதிகரிக்கும். எனவேதான் புதிய வகை 3ஜி ஹேன்ட்செட்டை குறைந்த விலையில் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications