பாளை சிறையில் கட்டிடங்கள் மீது ஏறி நின்று கைதிகள் போராட்டம்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் தங்களை பார்க்க வரும் உறவினர்களிடம் போலீசார் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து கைதிகள் நேற்று முன்தினமும், நேற்றும் கட்டிடங்கள் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் 1500 பேர் உள்ளனர். இதில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் அடங்குவர்.
இங்கு சிறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு ஜெயிலர் மற்றும் 10 அதிகாரிகள், 400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறையில் கடந்த 3 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதற்கு உடந்தையாக சில காவலர்கள், அதிகாரிகள் செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள் நேற்று வந்தனர். அவர்களை போலீசார் மற்றும் சிறை காவலர்கள் சோதனையிட்டனர். சிகரெட், பீடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர்.
பழங்கள், பி்ஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை மட்டுமே அனுமதித்தனர். இந்த கெடுபிடி சோதனை குறித்து கைதிகளிடம் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிறை கைதிகள் 600-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை தங்களுக்கு வழங்கப்பட்ட இரவு உணவை சாப்பிட மறுத்து ரகளையில் ஈடுபட்டனர்.
மேலும் சில கைதிகள் மரங்கள் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர். 25-க்கும் மேற்பட்ட கைதிகள் புதிய கட்டிட குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று போலீசார் மற்றும் சிறை காவலர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். அவ்வழியாக சாலையில் சென்றவர்கள் இதை வேடிக்கை பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications