போலி சான்றிதழ் தயாரிப்பு : விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் கைது
தென்காசி: போலி சான்றிதழ் தயாரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தென்காசியில் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம் தென்காசி போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் தனது கையெழுத்தை போலியாக போட்டு சிலம்பாட்ட சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து டி.எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தென்காசி இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் தென்காசி புதுமனை 1-வது தெருவைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி பீர்முகமது என்ற தமிழ்செல்வன்தான் போலி சான்றிதழ் தயாரித்து வழங்கியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர நிர்வாகியான கீழபறையடி தெருவைச் சேர்ந்த சந்திரனையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications