தீபாவளி கூட்டநெரிசல்-கரூர் ஜவஹர் பஜாரில் அலைமோதும் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி மற்றும் பல்வேறு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகை வரும் 5 ம் தேதி வருகின்றது. இதனை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல முக்கிய துணிக்கடைகள், நகை மாளிகைகள், பட்டாசு கடைகள் உள்பட பல்வேறு கடைகள் பொது மக்களை கவரும் வகையில் தளுபடி உத்தியை அறிவித்துள்ளன.
இதனையடுத்து, இதுவரை அமைதியாக இருந்த மக்கள் தற்போது முக்கிய துணிக்கடைகள், நகை மாளிகைகள், பட்டாசு கடைகள் , ஸ்வீட் கடைகள் உள்பட பல்வேறு கடைகளுக்கு படைஎடுத்த வண்ணம் உள்ளனர்.
இனால் கரூர் தலைநகரத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் பேக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், கும்பல் அலைமேதுவதால் தீபாவளி பண்டிகை களைகட்டுகின்றது.












Click it and Unblock the Notifications