ஆஸி பயணம்: வேளாங்கண்ணியில் பிடிபட்ட 14 இலங்கை அகதிகள்-3 ஏஜெண்டுகள் கைது
நாகப்பட்டினம்: 14 இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி வேளாங்கண்ணி விடுதியில் தங்க வைத்து, பணம் பெற்று, மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அகதிகள் முகாமில் இலங்கை அகதிகள் தங்கி உள்ளனர். அவர்களில் 14 பேர் தமிழக அரசின் அனுமதியின்றி ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டனர்.
இதற்காக அவர்கள் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டனர். இவர்களை அந்த ஏஜெண்டுகள் வேளாங்கண்ணிக்கு வரவழைத்து அங்கு சில விடுதிகளில் தங்க வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பற்றி தஞ்சை க்யூ பிராஞ்ச் போலீசார் வேளாங்கண்ணி விடுதிகளில் சோதனை நடத்தியபோது 14 பேரும் சிக்கினர். அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப ஏஜெண்டுகள் தலா ரூ.1 லட்சம் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது.
ஆனால், இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றி, மோசடி செய்ய இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அகதி முகாம்களில் இருந்து வெளியேற்றி அழைத்து வந்ததாகவும், வெளிநாடுகளில் கொண்டு போய் விட்டுவிடுவதாகவும் கூறி, அகதிகளிடம் இருந்து பண பெற்று மோசடி செய்ததாகவும் 3 ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர். இவர்களை நாகப்பட்டிணத்தில் வைத்து போலீசார் பிடித்தனர்.
மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் அனைவரும் மீண்டும் முகாம்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications