யுஎஸ் மாகாண கவர்னர் தேர்தலில் இந்திய பெண் வெற்றி-ஒபாமா கட்சி படுதோல்வி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நிக்கி ஹாலி வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வின்சென்ட் ஷீகானை அவர் தோற்கடித்தார். நிக்கிக்கு ஆதரவாக 52 சதவீத வாக்குகளும் ஷீகானுக்கு 46 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

அமெரி்க்காவில் குடியேறிய சீக்கிய பெற்றோருக்கு பிறந்தவரான நிக்கி 38 வயதானவர். இவர் 2 குழந்தைகளுக்கு தாயான இவரது கணவர் மைக்கேல் அமெரிக்க ராணுவத்துறையில் பணியாற்றி வருகிறார்.

3 முறை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள நிக்கி, தெற்கு கரோலினா மாகாணத்தில் கவர்னர் பதவி ஏற்க இருக்கும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல அமெரிக்க மாகாண கவர்னராக பொறுப்பேற்கும் இருக்கும் முதல் இந்திய பெணமணியும் நிக்கி தான்.

ஏற்கனவே லூசியானா மாகாண கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிந்தால் உள்ளார். இவர் தான் அமெரிக்க மாகாண கவர்னரான முதல் இந்தியர் ஆவார்.

நேற்று நடந்த தேர்தலில் 50 மாகாண கவர்னர்களில் 37 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 7 இந்தியர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 5 பேர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள்.

பென்சில்வேனியா மாகாணத்தில் மனன் திரிவேதி, லிபோர்னியா மாகாணத்தில் அமி பெரா, கன்சாஸ் மாகாணத்தில் ராஜ் கோயல், லூசியானா மாகாணத்தில் ரவி சங்கி செட்டி, ஓஹியோ மாகாணத்தில் சூர்யா யாலமன்சில்லி ஆகியோரும், குடியரசு கட்சி வேட்பாளரான அஷ்வின் லட் இலினாய்ஸ் மாகாணத்திலும் போட்டியிட்டனர். இவர்கள் 6 பேரும் வெற்றி பெறவில்லை. நிக்கி மட்டுமே வென்றுள்ளார்.

பிரதிநிதிகள் சபை எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் மொத்தம் உள்ள 435 தொகுதிகளுக்கும் மேலவையான செனட் சபையில் மொத்தமுள்ள 100 இடங்களில் 37 இடங்களுக்கும் நேற்று தேர்தல் நடந்தது.

இதில் பிரதிநிதிகள் சபையில் 344 இடங்களில் 213 இடங்களை குடியரசு கட்சி கைப்பற்றி, அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியை பின் தள்ளிவிட்டது.

மேலும் பெரும்பாலான இடங்களிலும் ஓட்டு எண்ணிக்கையில் குடியரசு கட்சியே முன்னணியில் உள்ளது.

அதே போல செனட் சபையிலும் குடியரசு கட்சி 23 இடங்களை பிடித்துள்ளது. ஜனநாயக கட்சி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இப்போது செனட் சபையில் மொத்தமுள்ள 100 இடங்களில் ஜனநாயக கட்சிக்கு 38 இடங்கள் உள்ளன. இப்போது 10 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் 48 இடங்களை அந்தக் கட்சி பிடித்துள்ளது.

எஞ்சியுள்ள 4 இடங்களில் 3 இடங்களில் வெற்றி பெற்றால் ஜனநாயக கட்சி மெஜாரிட்டியை பிடித்து விடும்.

ஒபாவாவின் செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த சோகத்துடன் தான் அடுத்த சில நாட்களில் இந்தியாவுக்கு வருகிறார் ஒபாமா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+