மேற்கு வங்கத்தில் எங்கள் கூட்டணி வென்றால் பிரணாப் முதல்வராகலாம்-மம்தா

ரயில்வே அமைச்சரான மம்தா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன், கூட்டணியின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வேன்.
எங்களுடைய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசியலிலும் நிர்வாகத்திலும் நீண்ட அனுபவம் பெற்ற பிரணாப் முகர்ஜியே முதல்வராகலாம். இது தான் என் விருப்பம்.
ஆனால் இந்தக் கூட்டணி தொடர வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியின் எந்தத் தலைவரும் என்னை மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடனான கூட்டணியை காங்கிரஸ் தான் முறித்துக்கொண்டு தனியாக போட்டியிட்டது. சிலிகுரியி உள்ளாட்சி மன்றத்தை மார்க்சிஸ்டுகளின் ஆதரவோடு காங்கிரஸார் கைப்பற்றினர்.
மேலும் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்க மார்க்சிஸ்டுகளுடன் காங்கிரஸ் கை கோர்த்த ன்னுதாரணமும் உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசு மத்தியில் அமைந்தபோது இடதுசாரிகள் அந்த அரசை வெளியிலிருந்து ஆதரித்தனர் என்பதை யாரும் மறக்க முடியாது.
காங்கிரஸ் கட்சியுடன் திரிணமூல் காங்கிரஸ் கூட்டு வைப்பது என்பது மக்களுடைய விருப்பத்தையும் பொறுத்தே அமையும். மக்களின் விருப்பத்துக்கு மாறாக நான் செயல்பட மாட்டேன்.
ஒருவேளை நான் மேற்கு வங்க முதல்வராக நேர்ந்தால், ரயில்வே அமைச்சர் பதவியை எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவருக்குத்தான் கொடுக்க வேண்டும்.
கூட்டணி, அரசியல் தொடர்பாக ராகுல் காந்தியின் பேச்சுகள், பேட்டிகளுக்குப் பதில் அளிக்க நான் விரும்பவில்லை.
அதேநேரம் ராகுல்காந்தி முதலில் அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும். அரசியலில் அவர் இன்னும் குழந்தையாகவே இருக்கிறார். நான் ஒன்றும் சீசனுக்காக வந்து செல்லும் பறவை அல்ல. நான் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோருடன் அரசியல் நடத்தியவள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்
அதே நேரத்தி்ல் ராகுலுக்கும் எங்களுக்கும் சண்டை மூட்டப் பார்க்காதீர்கள். அவர் மேலும் வளர்ந்து பெரிய தலைவராக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ராஜீவ், சோனியா மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன்.
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதில் காங்கிரஸ் கட்சி தனிச்சையாக முடிவு எடுக்கவோ, சுயேச்சையாக நடந்து கொள்ளவோ உரிமை உண்டு. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள நாங்கள் இந்த மாநில மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதன்படிதான் நடப்போம்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காக எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு தலை வணங்க மாட்டோம் என்றார் மம்தா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications