கர்நாடகா அழகி தென்னிந்திய அழகியாகத் தேர்வு : கேரளா 2-வது இடம், ஆந்திரா 3-வது இடம்

தென்னிந்திய அழகிகள் பங்கேற்கும் அழகிப் போட்டி கொச்சியில் கடந்த 3-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்தது. இதில் ஆந்திரா, கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். யோகா, தியானம், தனிநபர் ஆளுமை மற்றும் மேம்பாடு, நடை, அழகு உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தென்னிந்திய அழகியைத் தேர்ந்தெடுக்கும் இறுதிச் சுற்றுப் போட்டி நேற்று நடந்தது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தலா 5 பேரும், கர்நாடகாவில் இருந்து 4 பேரும், ஆந்திராவில் இருந்து 2 பேரும் என மொத்தம் 16 அழகிகள் பங்கேற்கின்றனர்.
இறுதியில் கர்நாடக அழகி சுபா தென்னிந்திய அழகியாக முடிசூடப்பட்டார். அவருக்கு தங்க கிரீடமும், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டது. கேரள அழகி கீது கிறிஸ்டி இரண்டாவது இடத்தையும், ஆந்திர அழகி நிகிதா நாராயணன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இரண்டாம் இடம் பெற்றவருக்கு ரூ. 50,000 மதிப்புடைய பரிசுகளும், மூன்றாவது இடம் பெற்ற அழகிக்கு ரூ.25,000 மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications