அசத்திய கோல் இந்தியா பங்குகள்
Subscribe to Oneindia Tamil
மும்பை: பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் சென்ற வாரம் வியாழக்கிழமை மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.
இரு தினங்களில் இந்த பங்குகளின் விலை, வெளியிட்டு விலையான ரூ.245யை விட 43 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.2,20,851 கோடியாக அதிகரித்தது.
ஆனால், இன்று இதன் மதிப்பு சரிந்தது. இருப்பினும் வெளியீட்டு மதிப்பை விட அதன் விலை 34 சதவீதம் அதிகமாகவே உள்ளது.
இதன்மூலம் நாட்டின் முன்னணி 10 நிறுவனங்களில் நான்காவது இடத்தை இந்த நிறுவனம் பிடித்துள்ளது.
இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் பங்குச் சந்தை இவ்வளவு பெரிய சாதனையை இதுவரை படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications