ஒபாமா வீட்டில் மனைவி மிஷல்தான் 'பாஸ்'
Subscribe to Oneindia Tamil

கணவருடன் டெல்லி வந்துள்ள மிஷல் இன்று காலை டெல்லியில் உள்ள தேசிய கைவினைப் பொருள் மியூசியத்திற்குச் சென்று சுற்றிப் பார்த்தார். அப்போது 10 முதல் 12 வயதுடைய சிறுமிகளையும் அவர் சந்தித்து பேசினார்.
அப்போது ஒரு சிறுமி, மிஷலிடம், உங்கள் வீட்டில் உங்கள் இருவருக்கும் சண்டை வந்தால் யார் முதலில் சமாதானாமாவார்கள் என்று கேட்டார். நம்மூரில் எல்லாம் இதுபோல சண்டை வந்தால் முதலில் மனைவிமார்கள்தானே சமாதானத்திற்கு வருவார்கள். அந்த நினைப்பில் அச்சிறுமி கேட்டார்.
அதற்குப் பதிலளித்த மிஷல், அவர் வந்து என்னிடம் ஸாரி கேட்கும் வரை நான் காத்திருப்பேன். ஏன் என்றால் நான் பெண் இல்லையா என்று கேட்டதும் அந்த சிறுமிக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.
இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிம்மோத்தி ரோமரின் மனைவி சாலியும் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications