கீர்த்திவாசனைக் கடத்திப் பணம் பெற்று லண்டன் தப்ப திட்டமிட்டிருந்த இளைஞர்கள்
சென்னை: சென்னை சிறுவன் கீர்த்திவாசனைக் கடத்தி அதன்மூலம் பெற்ற பணத்தைக் கொண்டு லண்டனுக்குத் தப்பி ஓடுவதற்கு திட்டமிட்டிருந்ததாக கைதாகியுள்ள இரு என்ஜீனியர் இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையின்போது இருவரும் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார்களாம்.
சென்னையைச் சேர்ந்த கீர்த்திவாசன் என்ற 13 வயது சிறுவன் சமீபத்தில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை போலீஸார் மிகவும் சாதுரியமாக நடந்து கொண்டு சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
24 மணி நேரத்தில் சிறுவன் மீட்கப்பட்டான். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட விஜய், பிரபு என்ற இரு இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் கொடுக்கப்பட்ட பிணையத் தொகையான 98 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
தற்போது இந்த வழக்கை ஜெ.ஜெ. நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நான்கு நாள் காவலில் அவர்களை எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின்போது இருவரும், நாங்கள் வேறு எந்தக் குற்றமும் செய்யவில்லை. பெரிய தவறு செய்து விட்டோம் என்று கூறி தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதனராம்.
கீர்த்திவாசனைக் கடத்தியதன் மூலம் கிடைத்த பணத்துடன் லண்டனுக்குத் தப்பி ஓடி விடலாம் என இருவரும் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications