மோகனகிருஷ்ணன் கொல்லப்பட்டதற்கு சிறார்களின் பெற்றோர் வரவேற்பு-மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
கோவை: இவ்வளவு சீக்கிரம், கோவை போலீஸார் எங்களது வேதனைக்கு தீர்வு காண்பார்கள் என நினைக்கவில்லை. கமிஷனர் சைலேந்திர பாபு மூலமாக எங்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. நரகாசுரனான மோகனகிருஷ்ணன் கொல்லப்பட்ட இன்றுதான் எங்களுக்குத் தீபாவளி என்று கோவை சிறார்கள் முஷ்கின், ரித்திக்கின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
கோவை சிறார்களை கொடூரமாகக் கொலை செய்த மோகனகிருஷ்ணனை கோவை போலீஸார் இன்று அதிகாலையில் என்கவுன்டர் மூலம் வீழ்த்தினர். இதை கோவை சிறார்களின் பெற்றோரான ரஞ்சித் ஜெயின் தம்பதி வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி. எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின், ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி. கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம்.
இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும் என்று தெரிவித்தனர்.
மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்:
இதேபோல முஷ்கின், ரித்திக் ஆகியோரது வீடு உள்ள ரங்கே கெளடர் வீதியில் வசிக்கும் மக்கள் மோகன கிருஷ்ணனின் மரணத்தை தீபாவளி போல பட்டாசு வெடித்துக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications