அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்காக ரூ. 68,000 அபராதம் கட்டிய சேலம் மாநகராட்சி!
சேலம்: சேலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான காரை முறைப்படி பதிவு செய்யாமல், வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பயன்படுத்தி பயன்படுத்தி வந்ததால், காலதாமத அபராத கட்டணமாக, 68 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில், சேலம் மாநகர மேயராக சுரேஷ்குமார் இருந்த போது, மேயருக்கு புதிய கார் வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க -வைச் சேர்ந்த ரேகா பிரியதர்ஷினி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 2007 ல் புதிய இன்னோவா கார் சேலம் மாநகராட்சிக்கு வாங்கப்பட்டது. ஆனால், மேயருக்காக வாங்கப்பட்ட கார், வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டு, அவர் அதை பயன்படுத்தி வந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, அந்த காரில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான காரை அமைச்சர் பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேயருக்காக ஒதுக்கப்பட்ட டி.என்.30 ஏஏ 9559 என்ற பதிவு எண்ணுடன் உள்ள கார், முறைப்படி பதிவு செய்யப்படவில்லை என்று, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று, அமைச்சர் பயன்படுத்தி வரும் காரை சேலம் மேற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அதற்கு பதிவு மற்றும் அபராத கட்டணமாக ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 788 ரூபாய் செலுத்தி முறைப்படி பதிவு செய்தனர்.
மேலும், காலதாமத கட்டணமாக ரூ 68 ஆயிரம் ரூபாய்க்கான செக் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications