சோனியா, ராகுல் காந்திக்கு அத்வானி கொடுத்த திடீர் டீ பார்ட்டி
டெல்லி: நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உரையாற்றி முடித்ததும், பாஜக மூத்த தலைவர் அத்வானி நாடாளுமன்ற வளாகத்தில் சிலருக்கு டீ பார்ட்டி கொடுத்தார். அதில் கலந்து கொள்ளுமாறு சோனியாவையும், ராகுலையும் அழைக்கவே அவர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு டீ சாப்பிட்டனர்.
நேற்று அத்வானிக்கு 83வது பிறந்த நாள். ஆனால் அது ஒபாமாவின் வருகையால் பெரியஅளவில் கவனிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் தேனீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் அத்வானி.
ஒபாமா பேசி முடித்துச் சென்றதும் இந்த தேனீர் விருந்து நடந்தது. அந்த சமயத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்களது இல்லத்திற்குச் செல்வதற்காக காருக்கு காத்திருந்தனர்.
இதைப் பார்த்த அத்வானி, அவர்களை நெருங்கிச் சென்று தேனீர் விருந்தில் பங்கேற்குமாறு அழைத்தார். இதை சோனியாவும், ராகுலும் உடனடியாக
ஏற்றுக் கொண்டு அவருடன் சென்றனர்.
அப்போதுதான் அத்வானியின் பிறந்தநாள் குறித்த விஷயம் தெரிய வந்தது அவர்களுக்கு. இதையடுத்து இருவரும், அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications