அயோத்தியில் கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை ஒப்படையுங்கள்-இந்து மகாசபை

இதுதொடர்பாக அமைப்பின் தேசியச் செயலாளர் சக்கரபாணி என்பவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 67 ஏக்கர் நிலத்தை சபையிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அந்த இடத்தில் கோயில் கட்ட முடியும்.
அந்த இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் விருப்பமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இதே கோரிக்கையை நேற்று நாடாளுமன்ற லோக்சபாவில் பாஜகவும் வைத்தது. பாஜக உறுப்பினர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், உண்மையின் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடமே ராமர் பிறந்த இடம் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு எதுவோ அதை ஏற்று செயல்படுத்துவோம் என்று 1993 ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்தது. அதை தற்போது நிறைவேற்ற வேண்டும். இப்போது ராமர் சிலை வைத்து வழிபடும் இடத்தை ஹிந்து மகாசபையிடம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அதன்படி அந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு சமாஜ்வாடிக் கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், வழக்கு இப்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இது குறித்து அவையில் பேசக் கூடாது என்றனர்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications