16வது ஆசிய விளையாட்டுப் போட்டி நாளை குவாங்ஷுவில் தொடங்குகிறது
குவாங்ஷு: 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி நாளை சீனாவின் குவாங்ஷு நகரில் தொடங்குகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசியாவின் பிரமாண்ட விளையாட்டுத் திருவிழா ஆசிய விளையாட்டுப் போட்டியாகும். 1951ம் ஆண்டு முதல் இப்போட்டி நடந்து வருகிறது. முதல் போட்டி டெல்லியில் நடைபெற்றது. கடைசியாக கத்தார் தலைநகர் டோஹாவில் 2006ம் ஆண்டு நடந்தது.
தற்போது 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் குவாங்ஷு நகரில் நாளை தொடங்குகிறது. இதற்காக பிரமாண்ட தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை தொடங்கி 27ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.
மொத்தம் 476 பிரிவுகளில் 42 விளையாட்டுகள் இடம் பெறவுள்ளன. தங்கப் பதக்கங்களின்எண்ணிக்கை 476 ஆகும். இதற்கு முன்பு நடந்த போட்டிகளை இந்த இந்தப் போட்டியில்தான் அதிக அளவிலான விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கிரிக்கெட்டும் முதல் முறையாக இடம்பெறுகிறது. இந்தியா உள்பட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சேர்ந்து கலக்கவுள்ளனர். 53 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தியாவிலிருந்து மொத்தம் 609 பேர் போட்டிகளில் பங்கேற்கின்றனர். கடந்த போட்டித் தொடரில் 432 பேர் தான் பங்கேற்றனர். இந்தமுறை32 போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது.
டோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 10 தங்கம், 17 வெள்ளி, 26 வெண்கலப் பதக்கங்களை அள்ளியது. ஆனால் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா கலக்கலாக விளையாடி 2வது இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்தது. எனவே நாளை தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications