லூகேமியா சிகிச்சைக்கு பணமின்றி பரிதவிக்கும் சென்னை சிறுமி
சென்னை ராமாபுரம், பாலாம்பிகாசாலை, முதலாவது மெயின்ரோட்டில் வசித்து வருபவர் பி. கருப்பையா. டிரைவராக பணியாற்றி வரும் இவரது இரண்டரை வயது மகள் சத்யா.
சத்யாவுக்கு Acute Lymphoblastic Leukemia (pre-B cell type) என்ற லூகேமியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி அனுமதிக்கப்பட்டாள். கடந்த ஒரு வருடமாக கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள். தற்போது நிலைமை தேறி வருகிறது.
இருப்பினும் மேலும் 2 ஆண்டுகளுக்கு சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கான சிகிச்சை செலவு ரூ. 3 லட்சமாகும் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கருப்பையா டிரைவராக இருப்பதால் இந்த பெரிய தொகையை தாங்க முடியாத நிலையில் உள்ளார்.
மாதந்தோறும் மருத்துவமனைக்குச் சென்று 2 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்ப வேண்டியுள்ளது. அறை வாடகை மற்றும் படுக்கைக்கான கட்டணத்தை மட்டுமே அவர்களால் செலுத்த முடிகிறது. இதுதவிர மருத்துவருக்கான கட்டணம், மருந்துகளுக்கான செலவும் உள்ளது.
இப்படி செலவுகள் பெரிதாக இருப்பதால் செலுத்த முடியாமல் தவிக்கிறார் கருப்பையா.
அவருக்கு உதவ நினைப்போர் கீழ்க்கண்ட தகவல்களின் மூலம் அதைச் செய்யலாம்.
பெயர்: பி.கருப்பையா (B.Karuppiah)
தொலைபேசி எண்: +91 94445 39929
முகவரி: 1/5ஏ, முதலாவது மெயின் ரோடு, பாலாம்பிகா சாலை, ராமாபுரம், சென்னை - 600089 (A 1/5A– 1st Main Road,Balambiga Road, Ramapuram, Chennai – 600089, Tamil Nadu)
வங்கிக் கணக்கு விவரம்:
வங்கி பெயர் - கரூர் வைஸ்யா பாங்க்
கிளை பெயர் - தி.நகர் கிளை, சென்னை
கணக்கு எண் - 123915531808
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications