காங். தலைவர் பலராமனை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை-ஸ்டாலின் உறுதி
சென்னை: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உ.பலராமனை கொலை வெறியுடன் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது சூடான விவாதம் நடந்தது. பின்னர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில்,
9-11-2010 அன்று காலை 11.00 மணி அளவிலே வன்னிய குல சத்ரிய மகா சங்க அமைப்பாளரும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பலராமன், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பழைய வண்ணாரப்பேட்டை என்கிற முகவரியில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபோது, வடசென்னை பகுதியைச் சார்ந்த சத்தியா என்கிற வண்ணை சத்தியா, சசிகுமார், அரிகுமார் உள்ளிட்ட சிலர் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து, கத்தியால், பலராமனையும், அவரது உதவியாளர்கள் இருவரையும் தாக்கிவிட்டு, தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
காயமடைந்தவர்கள் தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து காவல் துறையினர் முறையாக வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணையின்போது, இவ்வழக்கில் எதிரிகளாக வண்ணை சத்தியா, சசிகுமார் மற்றும் அரிகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வழக்கிலே மற்ற எதிரிகளை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை காவல் துறை எடுத்து வருகிறது. வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. எனவே, உறுதியாக இந்த அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கையை, உரிய வகையில் எடுக்கும் என்ற உறுதியை நான் இந்த அவைக்கு தெரிவிக்கிறேன் என்றார் ஸ்டாலின்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications