100 அடியை நெருங்குகிறது-இன்று காலை நிலவரம் 96 அடி
மேட்டூர்: கர்நாடகத்திலிருந்து பெருமளவில் தொடர்ந்து காவிரியில் நீர் வந்து கொண்டிருப்பதால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது 96 அடியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
ஜல் புயல் உபயத்தால், கர்நாடகாவில் பலத்த மழை பெய்ததன் காரணமாக இப்போது தண்ணீர் திறந்து விட முடியாதே என்று கூறி வந்த கர்நாடக அரசு, தனது அணைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உபரி நீரை பெருமளவில் திறந்து விட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு அபரிமிதமான நீர் வந்தது.
தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 30,430 கன அடிநீர் வந்து கொண்டுள்ளது.
இன்று அல்லது நாளை அணை 100 அடியைத் தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் முழுக் கொள்ளளவு 120 அடியாகும்.
மேட்டூர் அணை 100 அடியை நெருங்கியுள்ளதால் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் முழுக் கொள்ளளவை அது எட்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications