ஒரு அமைச்சர் விவகாரத்தால் எல்லாம் கூட்டணி உடையாது-திமுக
சென்னை: ஒரு அமைச்சரின் விவகாரத்தால் எல்லாம் திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையாது என்று திமுக கூறியுள்ளது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அளித்த பேட்டியில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அமைச்சர் ராசாவை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
காங்கிரஸ் இந்த விசயத்தில் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் காரணமாக கூட்டணி அரசில் இருந்து திமுக விலகும் பட்சத்தில் ஆட்சி கவிழாமல் இருக்க காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுக்க அதிமுக தயாராக உள்ளது. காங்கிரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற்றால், காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க நான் தயார் என்று கூறியுள்ளார்.
இந்த ஆதரவை காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்டது. இந் நிலையில் ஜெயலலிதாவின் அறிவிப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளரும், எம்.பியுமான டி.கே.எஸ். இளங்கோவன்,
எப்படியாவது அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற ஆதங்கத்தில் ஜெயலலிதா உள்ளார். அவர் எந்த அளவுக்கு ஆதங்கததுடன் உள்ளார் என்பதைத் தான் அவரது இந்த ஆதரவு அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.
ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. ஒரு அமைச்சரின் விவகாரத்தால் எல்லாம் கூட்டணி உடைந்துவிடாது என்றார்.
சிஏஜி ரிப்போர்ட்டை நம்பினால்...
ஜெயலலிதாவின் ஆதரவு அறிவிப்புக்கு முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. சிஏஜி என்பது ஒரு கணக்கு தணிக்கை அமைப்பு மட்டுமே. இதன் அறிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கக் கிளம்பினால் ஒரு அமைச்சர் கூட உருப்படியாக வேலை பார்க்க முடியாது என்றார்.
சோனியா-பிரதமருடன் கருணாநிதி பேச்சு?:
இதற்கிடையே ராசா விவாகரம் நாடாளுமன்றத்திலும் மிகப் பெரிய அளவில் வெடித்துள்ளதால் இது தொடர்பாக கொரியாவில் சுற்றுப் பயணத்தில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும் அவருடனும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனும் முதல்வர் கருணாநிதி பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது.
காங்கிரஸ் மிகவும் நெருக்கினால், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ராசாவை நீக்க திமுக அனுமதிக்கலாம் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications