கணவன் இறந்ததால் துக்கம்-குழந்தையைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
சேரன்மகாதேவி: வீரவநல்லூர் அருகே 3 வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள பொட்டல் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு சந்தியா, ராஜபிரதீப் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். முத்துகிருஷ்ணன் பலசரக்கு கடை நடத்தி வந்தார்.
கடந்த மாதம் 23-ம் தேதி அவரது கடை வழியாக வந்த லாரி அருகில் இருந்த மின்கம்பத்தில் உரசி அதிலிருந்து மின்வயர் அறுந்து விழுந்தது. இதனை முத்து கிருஷ்ணன் எடுத்து போடும்போது மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
கணவர் இறந்த துக்கத்தில் இருந்த அம்பிகா குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை ராஜபிரதீப்புக்கு கொடுத்தார். பின்னர் சந்தியாவுக்கு கொடுக்க முயன்றபோது அவர் அங்கிருந்து ஓடி அருகில் உள்ள உறவினர் வீட்டில் போய் சொல்லியுள்ளார்.
பயந்து போன அம்பிகா வீட்டை பூட்டிக் கொண்டு மீதமிருந்த மருந்தை தானும் குடித்து மயங்கி விழுந்தார். இதில் ராஜபிரதீப் வாயில் நுரை தள்ளி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அம்பிகா நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications