விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பெயரைப் பயன்படுத்தி தங்கபாலுவுக்கு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் அலுவலகத்தில் இருந்து பருதி இளங்கோ என்று குறிப்பிட்டு சத்தியமூர்த்தி பவன் முகவரிக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த கடிதம் குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் நேற்று மாலை புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மிரட்டி சரமாரியாக கடிதங்கள் வந்தன. முதல்வர் கருணாநிதிக்கும் அதேபோல வந்தது. இப்போது தங்கபாலுவுக்கும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications