தென்காசி பஸ் ஸ்டாண்டில் பயணிகளை ஓட ஓட விரட்டி தாக்கிய டிரைவர்-கண்டக்டர் கைது
தென்காசி: தென்காசியில் பயணிகளை ஓட ஓட விரட்டி உருட்டு கட்டையால் தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் பாரதி நகர் 2-ம் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த பிரமநாயகம் மகன் காளிமுத்து. இவர்கள் இருவரும் நயினாகரம் செல்வதற்காக செங்கோட்டையில் இருந்து ஒரு தனியார் பஸ்சில் ஏறினர்.
முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த இருவரையும் பஸ் கண்டக்டரான கட்டளைகுடியிருப்பைச் சேர்ந்த முருகன் பின்னால் சென்று அமருமாறு கூறினார். அதற்கு இருவரும் மறுத்து விட்டனர். பஸ் தென்காசி பேருந்து நிலையம் வந்ததும் மீண்டும அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த கண்டக்டர் முருகன் மற்றும் டிரைவர் சங்கரநாராயணன் ஆகியோர் பஸ்சில் கிடந்த உருட்டு கட்டையால் மணிகண்டன், பிரமநாயகத்தை தாக்கினர். இதனால் அவர்கள் அலறியவாறே பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். ஆனால் அப்போதும் விடாமல் ஓட ஓட விரட்டித் தாக்கினர்.
படுகாயம் அடைந்த இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தென்காசி சப்-இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வழக்கு பதிவு செய்து சங்கரநாராயணன், முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications