அதிமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆரூடம்
தென்காசி: யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் அதிமுக கூட்டணி தான் உறுதியாக ஆட்சியை பிடிக்கும் என்று தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி ஆனந்தா கிளாசிக் ஹோட்டலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
புதிய தமிழகம் கட்சி கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. அடுத்த மாதம் 15-ம் தேதி கட்சியின் 13வது ஆண்டு தொடக்க விழா நடக்கிறது.
இதனை முன்னிட்டு டிசம்பர் 15-ம் தேதி முதல் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் பல்வேறு சமூகப் பணிகளை நடத்துகிறார்கள். புதிய தமிழகம் கட்சியில் தற்போது 17 லட்சம் தொண்டர்கள் உள்ளனர்.
வரும் மார்ச் மாதம் 15-ம் தேதிக்குள் 30 லட்சம் தொண்டர்களை சேர்க்கும் பொருட்டு நவம்பர் 15-ம் தேதி முதல் தொடர்ச்சியாக அனைத்து கிராம, நகர, ஒன்றிய பகுதிகளில் உறுப்பினர்களை சேர்க்கும் முகாம்களை நடத்த இருக்கிறோம்.
வருகிற சட்டமன்ற தேர்தல் பணிகளை தீவிரப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயர் விபரம் வருமாறு,
வி.சுப்பிரமணியன்-சங்கரன்கோவில், ராஜா-வாசுதேவநல்லூர், ராசையா-கடையநல்லூர், மூர்த்தி-தென்காசி, எஸ்.என். முருகன்-அம்பை, ஏ.ராமசந்திரன்-நாங்குநேரி, முருகேசன்-ஆலங்குளம், அய்யாசாமி-நெல்லை, மணிகண்டன்-பாளையங்கோட்டை, வேலாயுதம்-ராதாபுரம், தொண்டரணி பொறுப்பாளராக ஜெயக்குமாரும், செய்தி தொடர்பாளராக கண்மணியும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications