ஆள் மாறாட்டத்தில் எஸ்.ஐ. கொலை: 17 பேருக்கு குற்றப்பத்திரிக்கை
அம்பை: ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் 17 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் வெற்றிவேல். இவர் ஆள்மாறாட்டத்தில் கடந்த ஜனவரி 7-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரைச் சேர்ந்த சிவகாமி, அவரது தம்பி கந்தசாமி, உறவினர்கள் மாடசாமி, சுப்பிரமணியன், முருகன், கண்ணன், சுரேஷ், ஐயப்பன், அம்மமுத்து, முத்துராமன், ராதாகிருஷ்ணன், ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த கள்ளபிரான், வாகைகுளம் பாண்டி, ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு அம்பை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 17 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகலை நீதிபதி கலைவாணி வழங்கினார். இதையொட்டி அம்பை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications