நான் சீனாவை காதலிக்கிறேன்: பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உருக்கம்!!

சீனாவில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியைப் பார்ப்பதற்காக சர்தாரி சீனா புறப்பட்டார். அவர் தாய் நாட்டில் இருந்து கிளம்பும் முன் நிருபர்களிடம் கூறியதாவது,
சீனாவுடன் எனக்கு அந்தரங்கமான காதல் இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்நாட்டு மக்கள் மற்றும் கலாச்சாரத்தின் அழகு எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இருக்கும் நட்பு வரும் தலைமுறையிலும் தொடர வேண்டும். இந்த உறவு தொடரும் என்று நம்புகிறேன்.
இந்த நட்புறவை இளம் தலைமுறையினரும் தொடர வேண்டும் என்பதற்காகத் தான் நான் தற்போது சீனா செல்கிறேன். இதற்காகவே என் மகனும் சீனா வருகிறார். சீனா பாகிஸ்தானில் நிறைய முதலீடு செய்ய முன்வர வேண்டும். சீன நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க பாகிஸ்தானை தேர்ந்து எடுக்கும் என்று நம்புகிறேன்.
ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மறைந்த பெனாசிர் பூட்டோவின் தந்தையும், கட்சியின் நிறுவனருமான ஜுல்பிகர் அலி பூட்டோவின் காலத்தில் இருந்தே சீனாவுடன் நட்பாக உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு சீனா உதவும் என்று நம்பிக்கை இருக்கிறது.
இரண்டு நாடுகளும் தரை வழிப் போக்குவரத்தால் இணைக்கப்பட்டிருந்தால் இதை விட இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். சீனாவுக்கு தரை வழியாகச் செல்ல வேண்டும் என்பது எனது கனவு. அதை நனவாக்க நான் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன். ஆயினும் இன்னும் நிறைவேறவில்லை.
தென்மேற்கு பாகிஸ்தான் துறைமுகமான க்வாடரில் இருந்து மேற்கு சீனாவின் சின்சாங்க் வரை கேஸ் பைப் மூலம் இணைப்பது பற்றியும் யோசித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
சீனா செல்லும் ஜர்தாரி சீன பிரதமர் வென் ஜியாபோ, தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா, சீனத் தலைவர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.
16-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவில் ஜர்தாரியின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சேர்மனுமான பிலாவல் பூட்டோ ஜர்தாரி கலந்து கொள்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications