சென்னை சிறுவனை கடத்திய 2 இளைஞர்களுக்கும் பொங்கலுக்குள் தண்டனை உறுதி-போலீஸ் கமிஷனர்
சென்னை: சென்னை சிறுவன் கீர்த்திவாசனை கடத்தி பிடிபட்டுள்ள இரண்டு என்ஜீனியர்களுக்கும் வருகிற பொங்கல் பண்டிகைக்குள் தண்டனை வாங்கித் தருவோம் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கீர்த்திவாசனைக் கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டி, பணத்தையும் துணிகரமாக வாங்கிக் கொண்டு தப்பிய விஜய், பிரபு ஆகிய இரு என்ஜீனியர் இளைஞர்களை சென்னை போலீஸார் மிகவும் திறமையாக பிடித்த சம்பவம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தியது.
இரு இளைஞர்களையும் தற்போது போலீஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். பணத்திற்காக மட்டுமே இந்த கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில்,
சென்னை அண்ணா நகரைச்சேர்ந்த பள்ளி மாணவன் கீர்த்திவாசன். கடத்தப்பட்ட வழக்கு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
அதன் பிறகு விரைவு கோர்ட்டில் விசாரணை நடத்தி பொங்கலுக்குள் வழக்கு விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவோம் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications