ஊழலுக்கான தண்டனையில் இருந்து ஆட்சியாளர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது-மதசார்பற்ற ஜனதாதளம்
நாகர்கோவில்: ஸ்பெக்டரம் உள்ளிட்ட ஊழல்களில் இருந்து ஆட்சியாளர்கள் ஒரு போதும் தப்பபிக்க முடியாது என மதசார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதசார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில் கூறியதாவது,
மத்திய அரசு ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் விளையாட்டு, ஆதர்ஷ் குடியிருப்பு போன்ற பெரிய ஊழல்களில் சிக்கி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
காமன்வெல்த் போட்டிகளில் மட்டும் ரூ. 70 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து விசாரணை நடத்த எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கையை பாராளுமன்றத்தில் எதிர்கொள்ள முடியாமல் அதில் இருந்து நழுவி விட காங்கிரஸ் முயற்சி செய்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அமைச்சர் ராசா ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தவுடன் அவர் ராஜினாமா செய்ய மறுத்ததோடு, இந்த விவகாரம் குறித்து பிரதமருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.
நாட்டுமக்களின் வரிப்பணம் சுரண்டப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதும் தான் அரசு ஏற்றுக்கொண்ட கொள்கையா என கேள்வி எழுகிறது. மேற்கண்ட ஊழல்களை அரசு முற்றிலும் மறுத்துவிட முயற்சித்தாலும், மக்கள் இவற்றை எல்லாம் மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, இதற்கான தண்டனையில் இருந்து ஆட்சியாளர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications