அக்டோபரில் இந்திய சந்தையில் கார், பைக்குகள் விற்பனை அபாரம்: மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்கள்

கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபரில் 1,32,615 கார்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு அக்டோபரில் விற்பனை 37.99 சதவிகிதம் அதிகரித்து 1,82,922 கார்கள் விற்றன. உள்நாட்டுச் சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபரில் 6,11,828 வாகனங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனை 43.31 சதவிகிதம் அதிகரித்து 8,76,810 வாகனங்கள் விற்றுள்ளன.
இதே போன்று இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 50.38 சதவிகிதம் அதிகரித்து 11,27,827 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 7,49,965 பைக்குகள் விற்பனையாகின.
மேலும், வர்த்தக வாகனங்களின் விற்பனையும் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்ததைவிட 18. 17 சதவிகிதம் அதிகரித்து இந்த ஆண்டு 50,835 வாகனங்கள் வி்ற்றன. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 43,018 வாகனங்கள் விற்பனையாகின.
அனைத்து ரக வாகனங்களின் விற்பனையும் 2009-ம் ஆண்டு அக்டோபரை விட 45.93 சதவிகிதம் அதிகரித்து 14,60,655 யூனிட்கள் விற்றன. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 10,00,953 யூனிட்கள் விற்பனையாகின.












Click it and Unblock the Notifications