கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை: மக்கள், வியாபாரிகள் கவலை

பொதுமக்கள் அனைவரும் தங்கள் உணவில் பயன்படுத்தும் முக்கிய பொருள் வெங்காயம். இது உள்ளி (சிறிய வெங்காயம்), பல்லாரி என இரண்டு ரகங்களில் விற்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து நெல்லைக்கு வெங்காயம் வந்து கொண்டிருந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் வெங்காய பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் வெங்காய அறுவடை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பெரிய அளவிற்கு வெங்காய விளைச்சல் இல்லை. இதையடுத்து தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காய விலை கடு்மையாக உயர்ந்துள்ளது.
பாளையங்கோட்டை சந்தையில் ஒரு கிலோ சிறிய வெங்காயம் ரூ.40க்கு விற்கப்படுகிறது. முதல் தர வெங்காயம் ரூ.44 வரை விற்பனையாகிறது. பல்லாரியும் கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது.
இதனால் நடுத்தரவாசிகள், சிறிய வர்க்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வெங்காய வியாபாரி ஒருவர் கூறுகையில், தீபாவளி பண்டிகையின் போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.30க்கு விற்கப்பட்டது. தொடர் மழை காரணமாக வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காய விலை உயர்ந்துள்ளது.
நவம்பர், டிசம்பர் மாதங்களும் மழை காலம் என்பதால் வெங்காய விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications