மக்களையே சந்திக்காத தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக
சென்னை: மக்களையும் சந்திக்காமல், மக்கள் நலனுக்காகப் போராடாமல் குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு குறுக்கு வழியில் பதவி நாற்காலியில் தங்கபாலு போன்றவர்கள் கசங்காத கதர் சட்டையுடன் காலத்தைக் கழிக்கின்ற நபர்களுக்கு வைகோ என்ற பெயரைக் கூட உச்சரிக்கும் தகுதி கிடையாது என்று மதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மதிமுக பொருளாளர் மாசிலாமணி கூறியிருப்பதாவது:
ஜனநாயக மீட்புக்காக மிசாவில், இலங்கைத் தமிழர் நலனுக்காக கருத்துரிமை காத்திட தடா, பொடா என்றும், தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்களை காக்கும் போராட்டங்கள் பலவற்றிலும் மக்கள் நலனுக்காக பலமுறை கைது செய்யப்பட்டு நீண்ட நாள் சிறைவாசம் செய்தவர் வைகோ.
அது மட்டுமல்ல, சிங்கள் வெறியர்களால் தாக்கப்பட்டு கை, கால்கள் ஊனமாகி வந்த தமிழர்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்த மனிதநேய செயலுக்காக வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் தடாவில் இருந்ததும் நாட்டு மக்கள் அறிவார்கள்.
இந்திய வரலாற்றில் இத்தகைய பெருமை நேருவிற்குப் பிறகு அரசியல் காரணங்களுக்காக அதிக நாள் சிறைவாசம் செய்தவர் என்கிற வரலாற்றுப் பெருமை வைகோவுக்கு மட்டுமே உண்டு.
சமீபத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தின் முன்பு வழக்கறிஞராக வாதாடி உலகத் தமிழர்களின் முன்பு தலைநிமிர்ந்து நிற்கும் உண்மைத் தமிழன் வைகோ என்பதை நாடறியும், உலகத் தமிழர்கள் அறிவார்கள்.
மக்களையும் சந்திக்காமல், மக்கள் நலனுக்காகப் போராடாமல் குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு குறுக்கு வழியில் பதவி நாற்காலியில் தங்கபாலு போன்றவர்கள் கசங்காத கதர் சட்டையுடன் காலத்தைக் கழிக்கின்ற நபர்களுக்கு வைகோ என்ற பெயரைக் கூட உச்சரிக்கும் தகுதி கிடையாது.
தங்கபாலுவுக்கு வேண்டுமானால் வரலாற்றின் சங்கதிகள் மறந்து இருக்கலாம். இப்போது அவர் பதவி நாற்காலியில் எப்படி உட்கார்ந்திருக்கிறார் என்பதை அவரது கட்சியினரே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கடலூரில் தொடங்கி திண்டிவனத்தில் முடிந்த இவரது ஜாமீன் கதை பற்றி அதே கட்சியின் தலைவர்களில் ஒருவரான இளங்கோவனே பேசுகிறார்.
பதவியைப் பற்றிக் கவலைப்படாத வைகோ விரும்பியிருந்தால் வாஜ்பாய் அரசில் நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என்று பெரிய பதவியையே வகித்திருப்பார்.
வைகோவின் தகுதி பற்றி தமிழகத்தில் அனைவரும் அறிவார்கள். இதனை தங்கபாலு போன்ற பதவிப் பிரியர்களின் கூட்டம் தெரிந்திருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications