வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று கடைசி நாள்
மதுரை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான அவகாசம் இன்றுடன் ( நவம்பர் 13 ) முடிவடைகிறது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம், 2011-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்துதல், இடம் மாற்றுதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைகின்றது.
இதற்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகள், சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்துதல், இடம் மாற்றுதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அங்கேயே அளிக்கலாம். பொது மக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications