108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியதே நான்தான்! - அன்புமணி
விழுப்புரம்: 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியதே நான்தான். ஆனால் அதை வைத்து பெயரை தட்டிக் கொள்ளப் பார்க்கிறது திமுக என்றார் அன்புமணி ராமதாஸ்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கெடார் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "இன்றைக்கு ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பா.ம.க.வை ஒழிக்க பார்க்கின்றன. தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அதனை பார்த்து மற்ற கட்சியினர் பயப்படுகிறார்கள்.
இந்தியாவிலேயே மதுவை ஒழிக்க வேண்டும் என்று கூறும் ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ்தான். 15 ஆண்டுகளுக்கு முன்பு 8 கோடி லிட்டர் மது விற்பனையானது. இன்றைக்கு 36 கோடி லிட்டர் மது விற்பனையாகிறது.
நான் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் வளர்ச்சிக்காக ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தேன். சிறப்பாக செயல்பட்டதற்காக உலக அளவில் 3 விருதுகளைப் பெற்றுள்ளேன்.
108 ஆம்புலன்ஸ் திட்டத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே நான்தான். கூட்டணியைப்பற்றி நமக்கு கவலையில்லை, மற்றவர்களுக்குத்தான் கவலை. பா.ம.க. தயவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சிக்கு வர முடியாது...
இந்த முறையாவது வன்னியர் அனைவரும் எங்கள் பேச்சைக் கேட்க வேண்டும். பாமகவுக்கே வாக்களிக்க வேண்டும்", என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications