புதிய புயல் சின்னம்... இன்றும் நாளையும் மழை! - வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

Satellite View Nov 15
சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பெரும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக இலங்கை அருகே அதிக அளவில் மேக கூட்டம் காணப்படுகிறது.

அந்தமான் நிகோபர் தீவுகள், வடக்கு தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அவ்வப்போது இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மதுரை, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து, ஏரி குளங்களை நிரப்பியது. குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோவை, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

இப்போது வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வலுக்கத் தொடங்கியுள்ளது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+