டெல்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து 67 பேர் பலி
டெல்லி: டெல்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 67 பேர் பலியாயினர். மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் உள்ள லலிதா பார்க் பகுதியில் உள்ள இந்தக் கட்டடம் நேற்றிரவு இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 67 பேர் பலியாயினர். மேலும் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பல வீடுகளைக் கொண்ட இந்தக் கட்டடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளே ஆகிறது. சமீபத்தில் பெய்த கனமழையின்போது யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்தப் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்தது.
இதனால் இந்தக் கட்டடத்தின் அடித்தளம் பலவீனமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந் நிலையில் கட்டடத்தின் அடித்தளத்தில் நீண்ட நாள்களாக தண்ணீர் தேங்கியிருந்ததோடு, அங்கு கூடுதலாக இன்னொரு தளம் கட்டும் பணியும் நடந்து வந்தது.
இந் நிலையில் அந்தக் கட்டம் இடிந்து விழுந்துள்ளது. இதில் தங்கியிருந்த பெரும்பாலானவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிகளின் குடும்பத்தினர் ஆவர். இந்தக் கட்டடம் அம்ரித் சிங் என்பவருக்குச் சொந்தமானது.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார்.
பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாராணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications