ஸ்பெக்ட்ரம்: பிரதமர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?-உச்சநீதிமன்றம் கேள்வி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சராக இருந்த ராசா மீது வழக்குத் தொடர, தனக்கு அனுமதி அளிக்குமாறு பிரதமருக்கு உத்தரவிடக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி சாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்க பிரதமர் ஏன் 15 மாதங்கள் எடுத்துக் கொண்டார் என்று உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது.
மேலும் இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய 11 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்றும் மத்திய அரசின் வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதிபதிகள் சிங்வி, கங்குலி அடங்கிய பெஞ்ச் இன்று இந்தக் கேள்விகளை எழுப்பியது.
மேலும் இந்த மனுவுக்கு பிரதமர் அலுவலகத்தின் விளக்கத்தைக் கோரிய நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அனில் அம்பானிக்கு சாதகமாக ராசா:
நீதிபதி சிங்வி கூறுகையில், இந்த விவகாரத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனு பொத்தம் பொதுவானதல்ல. அதில் சில குறிப்பிட்ட விஷயங்களை சாமி சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக ராசா நடந்து கொண்டதும் தெரிய வருகிறது. இதில் அனில் அம்பானியின் கைவரிசையும் இருந்துள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், இப்போது ராசா ராஜினாமா செய்துவிட்டதால் அவர் மீது வழக்குத் தொடர சாமிக்கு பிரதமரின் அனுமதி தேவையில்லை என்றார்.
இந் நிலையில், ராசா மீது அடுத்த 10 நாட்களில் வழக்குத் தொடரப் போவதாக சாமி அறிவித்துள்ளார்.
மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தை பலரும் பங்கு போட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தில் பிரதமர் நிறைய பதில்களை சொல்ல வேண்டி இருப்பதாகவும் சாமி கூறியுள்ளார்.
2008ம் ஆண்டிலேயே பிரதமருக்கு இந்த ஊழல் குறித்து தெரியும். இதனால் ராசா மீது நடவடிக்கை எடுக்குமாறு அப்போதிலிருந்தே நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் சாமி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications