கோடம்பாக்கத்தில் கற்பழிப்பு முயற்சியில் பெண் கொலை?
சென்னை: கோடம்பாக்கத்தில் புதுமணப் பெண் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டுள்ளார். கற்பழிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
சென்னை கோடம்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் டிரைவர் ஸ்டாலின். இவரது மனைவி ஞானமேரி (25). இவர்களுக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நேற்றும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் ஸ்டாலின் வீடு திரும்பியபோது அவரது மனைவி ஞானமேரி படுக்கையில் பிணமாகக் கிடந்தார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது முகத்திலும் மார்பிலும் நகக் கீறல்கள் இருந்தன. அவர் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன.
மோப்ப நாய் துப்பு துலக்குவதை தடுக்க மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஞானமேரியை கற்பழிக்க முயற்சி நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. அவர் தப்ப முயன்றதால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
அவரது கணவர் ஸ்டாலினிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவரது உறவினர்களான இரு வாலிபர்கள் நேற்று முன்தினம் வேலை கேட்டு வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்துள்ளது.
நேற்று ஸ்டாலின் இல்லாதபோதும் அவர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். இதனால் அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications