ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த செய்தி-சில மீடியாக்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராஜாவுக்காக வாதாடும் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா ஆகியோர் குறித்து சில ஊடகங்கள் விமர்சித்து செய்தி வெளியிடுவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கூறுகையில், கோபால் சுப்ரமணியம், அந்தியர்ஜுனா ஆகியோரின் நேர்மையை விமர்சித்து செய்தி வெளியிடுவது தவறானது.
இது ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமூகத்தின் நேர்மையையே சந்தேகிப்பதாக உள்ளது. வழக்கறிஞர் சமூகத்தையும், நீதித்துறையையும் சந்தேகிப்பதை, விமர்சிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனாவை இந்த கோர்ட் உயரிய கெளரவத்துடன் பார்க்கிறது என்றார்கள்.












Click it and Unblock the Notifications