விண்ணைத் தொடும் விமான கட்டணம்: டெல்லி-மும்பைக்கு ரூ 35000!

டெல்லியிலிருந்து மும்பைக்கு திடீரென கிளம்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்கள் ஒரு வழிக் கட்டணமாக மட்டும் எகானமி வகுப்பில் ரூ 16000 முதல் 20000 வரையும், எக்ஸிகியூடிவ் வகுப்பில் ரூ 35000 வரையும் செலுத்த வேண்டும்!
இது இந்தியாவிலிருந்து துபாய் அல்லது நார்வேக்கு சென்றுவருவதற்கு ஆகும் கட்டணத்துக்கு இணையானது.
நாடு முழுக்க உள்ள பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணங்கள் 25 சதவீதம் வரை இந்த சீஸனில் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் மும்பை- டெல்லி இடையிலான கட்டணம் இதுவரை காணாத ஒன்று என்று பயணிகள் கடுப்புடன் தெரிவிக்கின்றனர்.
ரூ 13000 முதல் 16000 வரை வாங்கிக் கொண்டிருந்த குறைந்த கட்டண விமானங்களிலும் இப்போது ரூ 22000 வரை வசூலிக்கப்படுவது, கிறுகிறுக்க வைத்துள்ளது.
அப்படியும் கூட விமானங்களில் இடம் கிடைத்தபாடில்லையாம். ஸ்பைஸ்ஜெட், இன்டிகோ, கோ ஏர் போன்ற விமானங்களில் டிக்கெட்டே கிடைக்காத நிலை உள்ளதாம். சென்னை, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான்.
இன்னொரு பக்கம் மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் விமானங்கள் நிறுத்க் கூட இடமில்லாத அளவுக்கு டிராபிக் அதிகரித்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் ஷெட்யூல்படி ஒரு நாளைக்கு 513 விமானங்கள் வந்து செல்ல வேண்டும். ஆனால் 490 விமானங்கள் வந்து செல்லவே டிராபிக் அனுமதிக்கிறதாம்.
இதனால் பல விமானங்கள் திடீர் ரத்தும், பயணிகள் அவதியும் தவிர்க்க முடியாததாகியுள்ளது. இதனால் மும்பையின் மெயின் ரன்வே சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் 8 மணிநேரம் மூடப்பட்டது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications