தா.பாண்டியன் மனைவி ஜாய் உடல்நலக்குறைவால் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் மனைவி ஜாய் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் மனைவி ஜாய். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். சிறிது காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக தா.பாண்டியன் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications