எங்கள் கட்சியின் தீர்மானம் குறித்து கருணாநிதி கவலைப்பட தகுதி இல்லை-சிபிஎம்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து முதல்வர் கருணாநிதி கவலைப்படுவது ஏன். இதுகுறித்து கருத்துக் கூற கருணாநிதிக்கு தகுதி கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தது குறித்து சிபிஎம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ஜெயலலிதாவின் பேச்சு மக்கள் நலனுக்கு உகந்ததல்ல என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவை கண்டிப்பது என்பதை விட திமுகவையும், மத்திய அரசையும் சாடவே சிபிஎம் தீர்மானம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்று கூறியிருந்தார்.
முதல்வரின் கருத்துக்கு ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க தயார் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதை தெரிவிக்க அவருக்கு தகுதியில்லை. தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து இப்போது நாங்கள் சிந்திக்கவில்லை. தற்போது மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி கூட்டு இயக்கங்களை நடத்துவதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications