கார்த்திகை மாதம் பிறந்தது: தென்காசி-பம்பைக்கு 28 சிறப்பு பஸ்கள்
தென்காசி: இன்று கார்த்திகை மாதம் பிறந்தது. இதையடுத்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு தென்காசியில் இருந்து பம்பைக்கும், பம்பையில் இருந்து தென்காசிக்கும் நாள்தோறும் 28 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
தென்காசியில் இருந்து பம்பைக்கு 14 பஸ்களும், மறுமார்க்கத்தில் பம்பையில் இருந்து தென்காசிக்கு 14 பஸ்களுமாக மொத்தம் 28 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.109 ஆகும். இந்த பஸ்கள் தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலூர், ராணி, கோணி, பத்தனம் திட்டா வழியாக பம்பை செல்லும்.
40 பேர் சேர்ந்தால் ஒரு பஸ் முழுவதையும் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. 40 பேர் ஓரே குருப்பாக செல்லும் பட்சத்தில் தென்காசியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவு உள்ள இடங்கள் வரை இலவசமாக வந்து அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெளியூர்களில் இருந்து தென்காசிக்கு ரயில் மூலம் வரும் 40 பேர் சேர்ந்து முன்பதிவு செய்தால் ரயில் நிலையத்தி்ல் வந்தே பக்தர்களை ஏற்றி கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதிய தென்காசி பேரூந்து நிலையத்தில் இதற்கான தற்காலிக முன்பதிவு அலுவலகம் அமைக்கப்படும் இடத்தை கேரள அரசு போக்குவரத்து கழக அலுவலர் மத்தாய் மற்றும் பணியாளர்கள் பார்வையி்ட்டு நகராட்சி அலுவலரிடம் அனுமதி பெற்றனர்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் 0473 5203445 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பம்பை செல்லும் பஸ்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று ஆயிரக்கணக்கானோர் குற்றாலம், ஐந்தருவி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குழத்துபுழையில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications