குளச்சல் அருகே மின்னல் தாக்கி 3 தொழிலாளர்கள் பலி
குளச்சல்: குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மணல் அள்ளியபோது மின்னல் தாக்கியதில் மூன்று தொழிலாளர்கள் பலியானார்கள். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
குமரி மாவட்டம் மணவளக்குறிச்சியில் மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள இந்திய அரிய மணல் ஆலை (ஐஆர்இ) செயல்படுகிறது. இங்கு கடல் மண்ணில் இருந்து இல்மனைட் உள்ளிட்ட அரியவகை தாதுக்கள் பிரித்தெடுக்கும் பணி நடக்கிறது.
தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர் தவிர கடற்கரையில் இருந்து மணல் அள்ளும் பணிகளில் கடலோர கிராமங்களை சேர்ந்த ஓப்பந்த தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
மண்டைக்காடு புதூரை சேர்ந்த 530 பேர் மணவளக்குறச்சி மணல் ஆலைக்கு ஓப்பந்த அடிப்படையில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் காலை ஷிப்டில் 270 பேரும், மதியம் 260 பேரும் மணல் அள்ளுவது வழக்கம்.
குமரி மாவட்டத்தில் நேற்று பகல் 1 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. 2வது ஷிப்ட் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் மழனையை பொருட்படுத்தாமல் மண்டைகாடு முதல் வெட்டுமடை வரை கடற்பகுதிகளில் குட்டைகளில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்தனர்.
உடனடியாக குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர்களை எடுத்து சென்றனர். இதில் மண்டைக்காடு புதூரை சேர்ந்த ரொமால்டு, சவேரியர் பிச்சை, வரிதையா ஆகியோர் இறந்தனர். காயமடைந்த 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications